Ticker

6/recent/ticker-posts

எங்கும் எதிலும் ChatGPTஇன் Ghibli படங்கள்.


அண்மையில் ChatGPTஇல் உருவாக்கப்படும் Ghibli படங்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மன் (Sam Altman) அது குறித்து 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Ghibli படங்கள் மீதுள்ள மோகம் அதிகரிக்கும் வேளையில், மக்கள் தங்களது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

'26 மாதங்களுக்கு முன்னர் ChatGPT அறிமுகமானபோது அது இணையத்தில் பரவலானது. 5 நாள்களில் ஒரு மில்லியன் பயனீட்டாளர்கள் பக்கத்தில் இணைந்தனர். தற்போது Ghibli மோகம் அதிகரித்திருப்பதால், வெறும் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பயனீட்டாளர்கள் பக்கத்தில் இணைந்துள்ளனர்," என்றார் திரு சாம்.

பிரபல ஜப்பானிய உயிரோவியக் கலைஞர் ஹயாவ் மியாஸாக்கியின் (Hayao Miyazaki) 'ஸ்டூடியோ ஜிப்லி' (Studio Ghibli) எனும் உயிரோவியக் கலைக்கூடம் அதை உருவாக்கியது.

அந்தக் கலைப்படைப்புகளை மையமாகக் கொண்டு Ghibli படங்களை இப்போது ChatGPTஇல் உருவாக்கலாம். சிலர் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். அவர்களது படங்களை அத்தளத்தில் மாற்றியிருக்கின்றனர். சிலர் அது காப்புரிமைக்கு எதிரான செயல் என்கின்றனர்.

84 வயது திரு மியாஸாக்கி, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்துக் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

Ghibli படங்களை ChatGPTஇல் உருவாக்கும் போக்கு வாழ்க்கையை அவமதிப்பதற்குச் சமம் என்று அவர் கூறினார்.

உயிரோவியத்தின் மூலம் வெளிக்கொணரும் உணர்வுகளை அது நீக்குவதாகத் திரு மியாஸாக்கி குறைகூறினார்.


seithi

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments