Ticker

6/recent/ticker-posts

IPL 2025 : பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்.. சென்னை அணியை போராடி வென்றது ஐதராபாத் அணி..


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கினர். ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். சாம் கரன் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஆயுஷ் மாத்ரே பவுண்டரிகளாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

19 பந்துகளில் 6 சிக்சருடன் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இணைந்த ரவிந்திர ஜடேஜா – டெவால்ட் ப்ரூவிஸ் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். 4 சிக்சர்களை விளாசி ப்ரூவிஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் 42 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷிவம் துபே 12 ரன்னும், தீபக் ஹூடா 22 ரன்னும் எடுத்தனர்.

தோனி 6 ரன்களில் வெளியேற 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிளாசன் 7 ரன்களில் வெளியேறினார்.

பொறுப்பாக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். அனிகேட் வர்மா 19 ரன்களில் வெளியேறியபோது ஐதராபாத் அணி 13.5 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் இணைந்த நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மெண்டிஸ் 32 ரன்களும், நிதிஷ் குமார் 19 ரன்களும் சேர்க்க 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் ஐதராபாத் அணி தரவரிசையில் 8 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி 7 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது.

News18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments