Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிங்கப்பூரில் $100 மில்லியன் செலவில் இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்ப ஆய்வு நிலையம்


இயந்திர மனிதக் கருவிகளின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

தேடல் மீட்புப் பணிகள் முதல் தீயணைப்பது வரை அனைத்த்திலும் அவற்றின் பங்கு இருந்துவருகிறது.

சிங்கப்பூரில் 100 மில்லியன் வெள்ளி செலவில் இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்ப ஆய்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

HTX எனும் உள்துறை அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் ST Engineering நிறுவனமும் இம்முயற்சியில் இணைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு கண்டுள்ள வளர்ச்சியைக் கொண்டு உள்துறைக் குழுவின் திறன்களை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

H2RC எனப்படும் உள்துறை அமைச்சின் புதிய இயந்திர மனிதக் கருவி நிலையம் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இல்லாத ஆய்வு வசதிகளை நிலையம் கொண்டிருக்கும்.

HTX நிறுவனம், தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு அங்கம் வகிப்பார்கள்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க 150க்கும் மேற்பட்ட திறனாளர்கள் பணியில் சேர்க்கப்படுவர்.

சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் புதிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் நிலையம் கவனம் செலுத்தும்.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments