
இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது, மேலும் இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனிப்பட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் என அனைத்தும் உள்ளன.
அனைத்து மாநிலங்களும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான குற்றச்செயல்கள். குற்றச் செயல்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முதல் மக்களின் அன்றாட வாழ்க்கை வரை பாதிக்கிறது.
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) 2024 அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் குற்ற விகிதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தேசிய குற்ற விகிதம் சிறிய ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும், சில மாநிலங்களில் குற்ற விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளன.
அதிக குற்ற விகிதங்களுக்கான காரணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன, மேலும் வறுமை, வேலையின்மை, சமூக பதட்டங்கள், கல்வியின்மை மற்றும் சில நேரங்களில் அரசியல் காரணங்கள் கூட குற்ற விகிதம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
இந்த மாநிலங்களில் சட்ட ஒழுங்கை மேம்படுத்த அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த பதிவில் குற்ற விகிதங்கள் அதிகமுள்ள டாப் 10 மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உத்தரப் பிரதேசம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம். இங்கு 1000 பேருக்கு 7.4 என்ற தனிநபர் குற்ற விகிதத்துடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
மற்ற மாநிலங்களை விட கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் உள்ளிட்ட வன்முறை குற்றங்கள் அதிக அளவில் இங்கு நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.
இந்த அதிக குற்ற விகிதத்திற்கு முக்கிய காரணங்களாக மக்கள் தொகை அளவு, அரசியல் செல்வாக்கு, மத மோதல்கள், வேலையின்மை மற்றும் சில பகுதிகளில் மோசமான சட்ட அமலாக்கம் போன்றவை உள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
குறைந்த மக்கள்தொகை கொண்ட வடகிழக்கு மாநிலமாக இருந்தாலும், அருணாச்சலப் பிரதேசத்தில் தனிநபர் குற்ற விகிதம் 5.8 ஆக உள்ளது.
திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள், உள்ளூர் தகராறுகள் மற்றும் வீட்டு வன்முறை ஆகியவை இங்கு அதிகளவில் பதிவாகின்றன.
மற்ற மாநிலங்களில் உள்ள தொலைவாக இருப்பது மற்றும் வலிமையான நிர்வாகம் இல்லாதது இங்கு குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் நிலத்தகராறுகள், பழங்குடி மோதல்கள் மற்றும் நக்சல் நடவடிக்கைகள் காரணமாக குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது. இங்கு தனிநபர் குற்ற விகிதம் 5.3 ஆக இருக்கிறது,
வறுமை, வேலையின்மை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள் குற்றச் செயல்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில்.
மேகாலயா
மேகாலயாவில் பாலியல் குற்றங்கள், திருட்டு மற்றும் இளைஞர் வன்முறை தொடர்பான குற்றங்கள் அதிகமாக பதிவாகின்றன.
இங்கு தனிநபர் குற்ற விகிதம் 5.1 என்ற விகிதத்தில் உள்ளது, இங்கு குற்றங்கள் பெரும்பாலும் சமூக அமைதியின்மை, வேலையின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள குளறுபடிகள் உள்ள காரணமாக குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
டெல்லி
தேசிய தலைநகரமாகவும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகவும் இருப்பதால், டெல்லியில் தனிநபர் குற்ற விகிதம் 5.0 ஆக உள்ளது. டெல்லியில் கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சைபர் குற்றங்கள் மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகமாக பதிவாகின்றன.
கூட்ட நெரிசல், சமூக-பொருளாதார இடைவெளிகள் மற்றும் காவல் துறையின் மீதான அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது.
அசாம்
அசாம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அதிகமான குற்றங்கள், கடத்தல் வழக்குகள் மற்றும் அரசியல் மோதல்களைப் பதிவு செய்கிறது. 4.4 குற்ற விகிதத்துடன் இந்த மாநிலம் ஆறாவது இடத்தில் உள்ளது,
இதற்கு மத மோதல்கள், பொருளாதாரப் போராட்டங்கள் போன்றவை முக்கியக் காரணாமாக உள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் நக்சலைட் கிளர்ச்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கிராமப்புற குற்றங்கள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகின்றன.
இங்கு தனிநபர் குற்ற விகிதம் 4.0 ஆக உள்ளது, இங்கு நிலவி வரும் சமூக உறுதியற்ற தன்மை, கல்வியறிவில் குறைபாடு மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் மோதல்கள் குற்ற விகிதம் காரணமாக இருக்கிறது.
ஹரியானா
ஹரியானாவில் 1,000 பேருக்கு 3.8 குற்றங்கள் பதிவாகின்றன, இதில் வீட்டு வன்முறை, கௌரவக் கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது.
சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் இங்கு குற்ற விகிதங்களுக்குப் பின்னால் உள்ள சில காரணிகளாகும்.
ஒடிசா
ஒடிசாவில் 1,000 பேருக்கு 3.8 குற்ற விகிதம் உள்ளது.
இங்கு நடைபெறும் பொதுவான குற்றங்களில் திருட்டு, கடத்தல் மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பான வன்முறை ஆகியவை அடங்கும். கிராமப்புறங்களில் நிலவும் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியின்மை ஆகியவை இந்தக் குற்றங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் குற்ற விகிதம் 3.6 ஆக உள்ளது,
இங்கு சைபர் குற்றங்கள், சொத்து தகராறுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
நகரமயமாக்கல், வீட்டு மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி போன்ற காரணிகள் மாநிலத்தின் குற்ற எண்ணிக்கைக்கு காரணமாக இருக்கின்றன.
இந்த பட்டியலில் தமிழ்நாடு 14 வது இடத்தில் உள்ளது. நாகலாந்து இந்த பட்டியலில் குறைந்த குற்ற விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
boldsky

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments