
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்பம் அதிகமாகி வருகிறது. இதனால், உடல் உஷ்ணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் மக்கள். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் உடல் உஷ்ணத்தை குறைக்க பல்வேறு உணவு வகைகளை பின்பற்றி வந்தனர். அதில் ஒன்று கம்மஞ்சோறு, கம்மங்கூழ். இந்த பாரம்பரிய உணவை உண்பதால் உடல் சூடு தனியும்.
கோடை வெப்பத்தில் உடல் சூட்டைத் தணிப்பதில் பல்வேறு உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்மங்கூழ் பிரதான உணவாகக் கருதப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றும் கம்மங்கூழ் செய்முறை மற்றும் கம்மங்கூழ் உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.
நம் முன்னோர்கள் சில இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களைப் பின்பற்றி வந்தனர். அவ்வாறு உடல் சூட்டைத் தணிக்கவும், பல்வேறு வெப்பம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவும் தனித்தன்மை வாய்ந்த பானங்களில் கம்மங்கூழும் ஒன்று.
இது தமிழர்களின் பாரம்பரிய உணவாகக் கருதப்படுகிறது. இதை நம் முன்னோர்கள் எளிமையான முறையில் தங்கள் வீடுகளிலேயே சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தனர். இந்த கம்மங்கூழில் ஏராளமான நன்மைகளும் உள்ளது.
கம்பு சோறு மற்றும் கம்மங்கூழ் வெயில் காலத்துக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு. கம்பில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக முளைகட்டிய கம்பில் வைட்டமின் டி, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
வெயிலின் தாக்கத்தினால் உடல் சூடாகும் போது கம்பு சோறு, கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இரத்த சோகையை கட்டுப்படுத்தும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை போக்கும் மற்றும் கண்பார்வைக்கு நல்லது. எனவே, கம்பு கூழாகவோ, கஞ்சியாகவோ செய்து மோருடன் சேர்த்து குடித்தால் முழு பயன்களை பெறலாம்.
கம்பங்கூழ் நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவு. இது உடலுக்கு மிகவும் நல்லது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே, நீங்களும் இந்த கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்காக கம்பங்கூழை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுங்கள்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments