Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்கா ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிக்க மற்ற நாடுகள் சண்டையிட்டு சாக வேண்டும்: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்க குற்றச்சாட்டு


பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய 
ராணுவம், பயங்கரவாதிகளின் 9 முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல் தொடங்கியது. 

எனினும், இரு நாட்டு தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்க தலையிட்டது. இதைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில், ”அமெரிக்கா பணம் சம்பாதிப்பதற்காக மற்ற நாடுகள் சண்டையிட வேண்டும்” என பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கவாஜா ஆசிஃப் தனது எக்ஸ் தளத்தில்  இதுகுறித்து விரிவாக பதிவிட்டுள்ளார்.

“உலகின் எல்லா இடங்களிலும் அமெரிக்கர்கள் போர்களை உருவாக்கலாம். கடந்த 100 ஆண்டுகளாக இருக்கலாம். அவர்கள், 260 போர்களை நடத்தியுள்ளனர். அவர்கள், மேலும் மேலும் பணம் சம்பாதிக்கிறார்கள். இராணுவத் தொழில் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு முக்கியப் பகுதியாகும். 

எனவே அவர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் அவர்கள் மற்ற நாடுகளைச் சண்டையிட வைக்கிறார்கள். சில நேரங்களில் இங்கே, சில நேரங்களில் அங்கே. நாடுகள் சண்டையிடும்போது அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, லிபியாவில் அவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். இவை பணக்கார நாடுகள். அவை இப்போது போரின் காரணமாக திவாலாகிவிட்டன. ஆனால், அமெரிக்கா சம்பாதித்தது” எனத் தெரிவித்துள்ளார்.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments