
அன்னையர் தினத்தின் போது அலாஸ்கா மக்கள் என்ன செய்வார்கள்?
பனி யுகத்தில் உயிர்பிழைத்த பழங்காலத்து musk ox எனும் எருதுகளைக் காணச் செல்வார்கள்!
அலாஸ்காவின் Musk Ox பண்ணையில் அனைத்து அம்மாக்களுக்கும் எருதுகளைக் காண இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். அங்கு 75 எருதுகள் உள்ளன. அவற்றோடு அவற்றின் கன்றுகளும் இருக்கும்.
தாய்க் கன்றுக்கும் பிள்ளைக் கன்றுக்கும் உள்ள பாசத்தைக் கண்டு அன்னையர் தினத்தைக் கொண்டாடலாம் என்று பண்ணையின் தலைமை அதிகாரி கூறினார்.
அன்னையர் தினத்தின்போது பண்ணையின் கோடைக்கால நடவடிக்கைகள் தொடங்கும். அதை பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்க இவ்வாறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் அன்னையர் தினத்தின்போது சுமார் 1500 பேர் பண்ணைக்கு வருவர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments