Ticker

6/recent/ticker-posts

கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்


மத்திய கனடா பிராந்தியத்தில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தினால் இருவர் பலியான வேளையில் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 

கடந்த காலங்களில் கனடா நாட்டில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வனத்துறைகளில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டு வனவிலங்கு பகுதிகளில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டது. வரலாற்றில் மிக மோசமாக அது பதிவானது 

கனடாவின் மனிதொபா வட்டாரத்தில் தீ விபத்தினால் இருவர் பலியானதாக கனடா போலீஸ் தெரிவித்தது. 

தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. 

பலமான காற்று காரணமாக தீ அருகிலுள்ள பகுதிகளில் வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

nambikkai

Email;vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments