Ticker

6/recent/ticker-posts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வெரிகோஸ் வெயின்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மருத்துவ ஆலோசனைகள்..!


கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வெரிகோஸ் வெயின்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெரிகோஸ் வெயின்கள் என்பது பாதங்களில் உள்ள நரம்புகளில் அடைப்புகள் ஏற்பட்டு கெட்ட ரத்தம் தேங்கி நிற்கிறது. இதனால் அவை சுருண்டு வீங்குகின்றன.

இது பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது. சரியாக நிற்க முடியாது, அப்படி நிற்கும்போது வலி அதிகமாக ஏற்படும். கர்ப்ப காலத்தில் அவை ஏன் உருவாகின்றன, அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வது அசௌகரியத்தைத் போக்கவும், சிக்கல்களைத் தடுக்கவும் உதவும். இதற்கான காரணங்களும், தீர்வுகளும் இங்கே விளக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மும்பை செம்பூரில் உள்ள சுரானா சேத்தியா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அஷாங்க் பன்சால், விளக்கமளித்துள்ளார்.

புகழ்பெற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அஷாங்க் பன்சால் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெயின்கள் உருவாக பல காரணங்கள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் இரத்த அளவு அதிகரிக்கிறது:

கர்ப்ப காலத்தில் வளரும் கருவை ஆதரிக்க உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, இதனால் நரம்புகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இது வெரிகோஸ் வெயின்களை ஏற்படுத்துகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை: கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் செல்வது கடினமாகிறது. இது வெரிகோஸ் வெயின்களை ஏற்படுத்தும்.

கருப்பை அழுத்தம்: 

குழந்தை வளரும்போது, ​​வயிற்றுக்கு அருகிலுள்ள இரத்த நாளங்கள் மற்றும் பிற உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது வெரிகோஸ் வெயின்களை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்:

கால்களில் நீலம் அல்லது ஊதா நிறத்தில் வீங்கிய, பெரிதாகிய நரம்புகள் இருக்கும்

கால்களில் கனமான உணர்வு அல்லது வலி உணர்வு ஏற்படும்.

காலின் கீழ் பகுதி, காலின் பின் பகுதி மற்றும் கணுக்கால்களில் வீக்கம் இருக்கும்

பாதிக்கப்பட்ட நரம்புகளைச் சுற்றி அரிப்பு, எரிச்சல் ஏற்படும்

நீண்ட நேரம் நின்ற பிறகு அல்லது உட்கார்ந்த பிறகு வலி ஏற்படும்

கால்களில் அசௌகரியம் மற்றும் வலி உணர்வு ஏற்படும்

குறிப்புகள்:

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்: கர்ப்ப காலத்தில் வழக்கமான உடற்பயிற்சி மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது வெரிகோஸ் வெயின் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனினும் எந்தவொரு உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.

உங்கள் கால்களை உயரமாக வைத்திருங்கள்: 

கர்ப்பிணிப் பெண்கள் ஓய்வெடுக்கும்போது, ​​இதயத்திற்கு இரத்த ஓட்டம் செல்லும் வகையில் தலையணைகளைப் பயன்படுத்தி உங்கள் கால்களை உயரமாக தூக்கி வைத்துக்கொள்ளவும். இதைச் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

சாக்ஸ் அணியுங்கள்: 

கர்ப்பிணிப் பெண்களுக்கு கால்களில் இரத்தம் தேங்குவதை தடுக்க சாக்ஸ் அணியலாம், இது கால்களுக்கு ஆதரவை வழங்குகின்றன மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. இதை கம்ப்ரஸ்ஸன் ஸ்டாக்கிங் என்று அழைக்கப்படுகின்றன.

எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்: 

கர்ப்பிணிப் பெண்கள் வெரிகோஸ் வெயின் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற தங்கள் எடையில் கவனம் செலுத்த வேண்டும். எடை குறைவாக இருப்பது இரத்த நாளங்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான, சத்தான உணவை எடுத்துக் கொள்வது ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியமாக எடையைப் பராமரியுங்கள்.

நீண்ட நேரம் நிற்பதையோ அல்லது உட்காருவதையோ தவிர்க்கவும்: 

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கால்களில் இரத்த ஓட்டத்தை மோசமாக்கும். இதன் காரணமாக வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தவிர்க்க இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள், கால்களை நீட்டி அல்லது மடக்கிக் கொள்ளுங்கள் மற்றும் முடிந்தவரை நகர்ந்து கொண்டே இருங்கள்.

கால்களில் கடுமையான வலி அல்லது வீக்கம், தோல் மாற்றங்கள் அல்லது நரம்புகளுக்கு அருகில் புண்கள், இரத்த உறைந்ததற்கான அறிகுறிகள் அல்லது நரம்புகள் கடினமாகவோ, சூடாகவோ அல்லது மென்மையாகவோ உணர்ந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று டாக்டர் அஷாங்க் பன்சால் அறிவுறுத்தியுள்ளார்.

news18

Email;vettai007@yahoo.com

 


Post a Comment

0 Comments