Ticker

6/recent/ticker-posts

அடிக்கடி காபி, டீ குடிக்கறவங்களுக்கு ஷாக்கிங் நியூஸ்... காஃபைன் மூலம் தூண்டப்படும் IBS கோளாறு… பதற வைக்கும் மருத்துவ ஆய்வுகள்!


இரிட்டபில் பவல் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் IBS என்பது இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு ஆகும். இதில் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், வாயு தொல்லை, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. ஆனால் தற்போது டீ அல்லது காபி மூலமாக பருகப்படும் காஃபைன் காரணமாகவும் IBS ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

காஃபைன் என்பது டீ மற்றும் காபியில் காணப்படும் ஒரு இயற்கை ஸ்டிமுலண்ட் ஆகும். இது நம்முடைய நரம்பு அமைப்பில் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த காஃபைன் நம்முடைய எச்சரிக்கை உணவு மற்றும் ஆற்றல் அளவுகளை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், காஃபைன் நம்முடைய இரைப்பை குடல் பாதையையும் தூண்டுகிறது. IBS பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களுக்கு இது மிகவும் பிரச்சனை நிறைந்ததாக அமைகிறது.

அளவுக்கு அதிகப்படியாக காஃபைன் சாப்பிடுவது IBS அறிகுறிகளை மேம்படுத்தும் என்று மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகள் மற்றும் ஒரு சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. காபி குறிப்பாக இரைப்பை குடலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அங்கு கேஸ்ட்ரிக் அமிலம் உற்பத்தி தூண்டப்பட்டு, அடிவயிற்றில் வலி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மற்றும் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

அதே நேரத்தில் டீயானது சற்று மென்மையாக வயிற்றில் செயல்பட்டு குறைவான எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் இதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று சொல்லிவிட முடியாது. பிளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகிய இரண்டிலுமே காணப்படுகிறது. ஆனால் காபியுடன் ஒப்பிடும் பொழுது இவற்றில் குறைவான அளவு காஃபைன் உள்ளது. அதே நேரத்தில் ஹெர்பல் டீ வகைகளில் காஃபைன் கிடையாது. ஆனால் அவற்றில் நம்முடைய செரிமானத்தை தூண்டக்கூடிய காம்ப்பவுண்டுகள் இருக்கலாம். உதாரணமாக புதினா டீயில் குடல் தசைகளை ரிலாக்ஸ் செய்து, அறிகுறிகளை தணிக்க உதவும் காம்பவுண்டுகள் உள்ளன. எனவே மேலும் சில ஹெர்பல் தேநீர் வகைகள் வீக்கத்தை குறைக்கின்றன.

IBS பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் அறிகுறிகள் என்பது நபருக்கு நபர் மாறுபடலாம். ஒரு சிலருக்கு 1 அல்லது 2 கப் காபி அல்லது டீ குடித்தால் கூட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது அல்லது சிறிய அளவிலான அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் ஒரு சிலருக்கு சிறிய அளவில் காபி, டீ எடுத்துக் கொண்டால் கூட உடனடியாக அதனால் விளைவுகள் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. இந்த விளைவுகள் என்பது மன அழுத்தம் மற்றும் பிற உணவு சார்ந்த காரணிகளால் தூண்டப்படலாம்.

காபி காரணமாக IBS ஏற்படுவது கிடையாது. ஆனால் IBS அறிகுறிகளை இது மோசமாக்கும். எனவே காஃபைனை குறைவான அளவு சாப்பிடுவது, காஃபைன் இல்லாத ஆப்ஷன்களை தேர்வு செய்வது மற்றும் காஃபைன் எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் அறிகுறிகளை கண்காணிப்பது போன்றவை IBS பிரச்சனையை நிர்வகிப்பதற்கு உதவும்.

News18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments