நலம் வாழ -மருத்துவப் பகுதி-2

நலம் வாழ -மருத்துவப் பகுதி-2


மிகினும், குறையினும் நோய்

அன்பார்ந்த வேட்டை வாசகர் களுக்குச் சென்ற வாரம் உடல் என்னும் இயந்திரத்தை எவ்வாறு சரியாக இயக்குவது,நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றிப் பார்த்தோம்.இந்த வாரம் ஒரு ஆச்சரியமான விஷயம் பற்றி உங்களிடம் நான் சொல்லப் போகிறேன்.

நமது உடல் தினம்,தினம்  நம்மிடம் பேசுகின்றது என்பதைத்தான்.

ஆம் !!!

போங்க மேடம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசினாலே எனக்கு கேட்க மாட்டேங்குது இதுல நம்  உடலும், உள் உறுப்புகளும் பேசுவதை நான் எப்படி கேட்கிறது என்று சொல்வது எனக்குப் புரிகிறது.

ஆம்!!

அதுதான் உண்மை.

நமது உடல் நம்மிடம் பேசுகிறது. தினமும் பேசிக்கொண்டே தான் இருக்கிறது.

நாம்  பிறந்தது முதல்  இறக்கும் வரை,பேசிக் கொண்டே தான் இருக்கப் போகிறது .இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

சரி நமது உடல் என்ன பேசுகிறது என்பதைப் பார்க்கலாம். 

நாக்கின் மூலம் சுவையையும் அறியலாம் தானே .இந்த சுவையின் மூலமாகத்தான் நாம் நாவிற்கு அடிமையாக இருக்கிறோம் .

சரி நாக்கு எப்படி நம்மிடம் பேசுகிறது ?

அம்மா எங்கோ உணவு சமைத்த உடன் அதன் சுவையை உணர்ந்து உமிழ்நீர் சுரந்து விடுகிறது. உடனே ஒரு பிடி பிடித்து விட வேண்டும் என்று நாக்கு கூறுகிறது. என்ன வேலை இருந்தாலும் அதை விட்டுவிட்டு அம்மா அழைத்தவுடன் உணவுக்காக உடனே சென்று விடுகிறோம். நன்றாக சாப்பிடுகிறோம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைகிறது.

இன்னும் கொஞ்சம் சாப்பிடு கண்ணா., 
என்று அம்மா சொல்ல., நமது வயிறோ.,போதும் மகனே நிறுத்திக்கொள் இனி சாப்பிட்டால் அபாயம்!!! என்ற எச்சரிக்கை மணியை அடிக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாவோ இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று சொல்கிறது.

இங்கேதான் ஆரம்பிக்கிறது உங்களது 60% சதவீதமான நோய் எதிர்ப்பு ஆற்றல். என்ன சம்பந்தமே இல்லாமல் நோய் எதிர்ப்பிற்கும் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது.?என்று தானே கேட்கிறீர்கள். 
இப்பொழுதும் கூட என்ன நமது உடல் நம்மிடம் பேசுகிறது என்கிறீர்கள்.ஆனால் ஒன்றும் பேசுவதில்லையே!! என்பதை போலத்தான் இருக்கும்.

அதுதான் நமது நாக்கும் நமது வயிறும் பேசிக் கொண்டது அல்லவா?
"நாக்கு வேண்டும் என்கிறது, வயிறு போதும்" என்கிறது
இதைத்தான் திருவள்ளுவர் அன்றே அறிவுறுத்திக் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

"மிகினும் குறையினும் நோய் செய்யும் " என்று.,

நாவு கேட்கும் பொழுது உணவு கொடுத்த நீங்கள், வயிறு போதும் என்றவுடன்  நிறுத்திக் கொண்டீர்கள் என்று சொன்னால் பிணி என்பது உங்களது வாழ்க்கையிலே அண்டாது.

இதை நாம் உணர மறுக்கிறோம்.!!
அதே சமயம் மறக்கிறோம்.!!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே நலமும் நோயும் இணைந்தே உள்ளன. அவர் அவரின் வாழ்க்கை முறை, செயல், மனோபாவம், குணம் எண்ணங்கள் ஆகியவைகளுக்கு ஏற்ப அவரவரிடம் உள்ள நோயோ, நலமோ வெளிப்படுகிறது .

ஆம்., நாம் உண்ணும் உணவில் தான் நமக்கு அனைத்தும் கிடைக்கின்றது.

எந்த ஒரு உணவு பொருளும் நமக்கு பயன் அளிக்க வேண்டும் என்றால், அது எக்காரணத்தைக் கொண்டும் அந்த பொருளில் செயற்கையை புகுத்தி விடக்கூடாது.

அதாவது அந்த உணவுப் பொருளின் இயற்கை தன்மை எந்த விதத்திலும் சிதைக்கப்படக் கூடாது. மீறி சிதைக்க ப்பட்டால், அது நச்சுப் பொருளாகி உடல் உபாதைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது.

அதாவது நாம் உண்ணும் உணவில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதைத் தான் நான் கூற வருகிறேன்.

எப்பொழுது நமது உடல் உடலின் மொழிகளை நாம் புறக்கணித்து விடுகின்றோமோ,அப்போது, உடலின் ஆரோக்கியமும் நம்மைப் புறக்கணித்து விடுகின்றது.

நமது உடலின் மொழிகளைத் தெரிந்து கொண்டோம் என்று சொன்னால் ஆரோக்கியத்தைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம். ஆம் வாசகர்களே!! இப்பொழுது பசி என்ற உணர்விற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று கேட்டோம் அல்லவா? அதற்கான பதிலை நாம் பார்ப்போம்.

நமது உடலானது வாயில் ஜீரணத்தைத் தொடங்கி, செரித்து கழிவாக அதை வெளியேற்றும் வரையில் சரியாக நமது செரிமான மண்டலம்  இயங்கும் என்று சொன்னால் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஆரோக்கியமும் நமது கையில் தான் ....
(தொடரும்)


அடுத்த தொடரில் ...
உணவை எவ்வாறு வாயில் செரிப்பது.
என்ன? வாயில் செரிமானமா? என்று
கேட்பது புரிகிறது.
வேட்டை வாசகர்களே!! 
அதற்கான பதிலை அடுத்த வாரம் பார்க்கலாம்.
நலம் வாழ ...
என்றும் பிரார்த்திக்கும்.
உங்களின் நலம் விரும்பி ...
டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.



 


Post a Comment

Previous Post Next Post