
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பையை எளிதாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃபில் குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக பாயின்ட்ஸ் டேபிளில் பஞ்சாப் முதல் 2 இடங்களில் தொடரை நிறைவு செய்யும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 1 போட்டியில் பங்கேற்றும்.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் 3 மற்றும் 4 ஆம் இடம்பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்தனர்.
அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன், விஜய் குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 13 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த ஜோஷ் இங்லீஷ் – பிரியன்ஷ் ஆர்யா இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரியன்ஷ் 62 ரன்களில் ஆட்டமிழக்க இங்லீஷ் 73 ரன்கள் குவித்து வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் சேர்க்க 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. மேலும் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிபையர் 1 போட்டிக்கும் பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments