Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரூ.835 கோடி மதிப்பு.. எந்த ரேடாரிலும் சிக்காது.. உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம்.. தற்போது இந்தியாவில் தான் இருக்கிறது?


உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம், தற்போது கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கிறது. இதுபற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரிட்டிஷ் ராயல் கடற்படை போர் விமானமான F-35B, சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து, சுமார் 72 மணி நேரத்திற்கும் மேலாக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெட் அவசரமாக தரையிறங்கியது.

இந்தியாவிற்கு ஏன் வந்தது?: இந்த விமானம் இங்கிலாந்தின் விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் ஒரு பகுதியாகும், இது தற்போது இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ளது. இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் இருந்த கேரியரில் இருந்து போர் விமானம் புறப்பட்டது.

இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, அது கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை, மேலும் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விட வேண்டியிருந்தது.  இந்திய விமானப்படை அதிகாரிகள் இதை கண்காணித்து வருகின்றனர். ஜெட் எப்போது சரி செய்யப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேம்பட்ட தொழில்நுட்பம்: F-35B விமானம், மேக் 1.6 வரை மிக அதிக வேகத்தில் பறக்க முடியும். மேலும், இது ரேடார் மூலம் கண்டறிவது கடினமாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விமானிகளுக்கு போர்க்களத்தின் முழு காட்சியையும் வழங்கும் உயர் தொழில்நுட்ப சென்சார்களைக் கொண்டுள்ளன என்றும், உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஒற்றை இருக்கை போர் விமானம் சுமார் 51 அடி நீளம் கொண்டது. கிட்டத்தட்ட 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இதன் விலை 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.835 கோடி) ஆகும். இந்த நிலையில், இதுதொடர்பாக இந்திய விமானப்படை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இது வழக்கமான திசை திருப்பல் என்று கூறப்பட்டுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments