Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்


இப்போதெல்லாம் முடி உதிர்தல் மற்றும் பலவீனமடைதல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போது இளநரையும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதற்கெல்லாம் என்னதான் இரசாயன பொருட்களை பயன்படுத்தினாலும் அது நமக்கு எப்பயனும் தரப்போவதில்லை.

இந்த பதிவில் அதற்கெல்லாம் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரு மூலிகை தயாரிப்பை பார்க்க போகின்றாம்.

இது கட்டாயம் உங்கள் தலைமுடி பிரச்சனையை தீர்ப்பதுடன் முடி வளர்ச்சியை நன்றாக தூண்டும். தலையில் பொடுகு, பேன் தொல்லையும் இருக்காது.

இது தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முடி வளர்ச்சி

முதலில் ஒரு அளவான கற்றாழை துண்டை எடுத்து அதை சிறிது சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்ட அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை எடுத்து சுத்தம் செய்து அதையும் சிறிதாக வெட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இது இரண்டையும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு வடிகட்டியை கொண்டு வடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்த அரைத்த கலவையுடன் வெந்தய பொடி இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஆலிவ் ஆயில்  கொஞ்சம் சேர்த்து கலந்து விட்டு, அதனுடன் வைட்டமின் ஈ சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இந்த கலவையை நீங்கள் இரவில் தூங்க முன்னர் தலைக்கு தேய்ந்து விட்டு காலையில் குளிக்கலாம். அல்லது தலையில் நன்றாக முடியின் வேர்கால்களில் இருந்து நுனி வரை தேய்த்து நான்கு மணி நேரத்தின் பின் குளிக்கலாம்.

இப்படி மூன்று வாரம் தொடந்து செய்து பாருங்கள் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

வாரத்தில் நான்கு தடவை போட்டால் போதும். இதற்கு பின்னர் கருமையான நீளமான அடர்த்தியான கூந்தல் கிடைப்பதில் சந்தேகமில்லை.

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments