
அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு கூடியிருப்பது, அமெரிக்காவில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களின் பெற்றோர்க்குக் குறிப்பிடத்தக்க வகையில் நிதிச்சுமையைத் தளர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்தில் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கும் அதனால் நன்மை ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர் வலுவிழந்துவரும் நிலையில், அதற்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 6 முதல் 7 விழுக்காடு வலுவடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு நிகராகப் பதிவான ஆக வலுவான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு இது.
அண்மையில், ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 1.3க்கும் குறைவாகப் பதிவாகியது. சில நேரம் ஏறக்குறைய 1.28ஆகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் கல்விக் கட்டணம், தங்குமிடம், வாழ்க்கைச் செலவினத்துக்காக அனுப்பப்படும் ஒவ்வொரு சிங்கப்பூர் டாலருக்கும் ஈடாகக் கூடுதலான எண்ணிக்கையில் அமெரிக்க நாணயத்தைப் பெற முடியும்.
பெற்றோர் அமெரிக்காவில் பயிலும் தங்கள் பிள்ளைகளின் இதர செலவுகளுக்கு நிதி ஒதுக்க இது உதவும் என்று கூறுகின்றனவர் ஆய்வாளர்கள்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஆண்டுக்கு US$30,000 கல்விக் கட்டணம் செலுத்த சிங்கப்பூர்ப் பெற்றோர்க்கு, 2024ஆம் ஆண்டில் $40,500 தேவைப்பட்டிருக்கும். ஏனெனில் அப்போது ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 1.35ஆக இருந்தது.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கு, தங்குமிடம், உணவு, கேளிக்கைத் தெரிவுகள் இன்னும் மலிவாக, மேலும் கட்டுபடியாகக்கூடியதாகத் தோன்றக்கூடும். ஆனால், அமெரிக்க வணிகர்கள் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கூறினர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு வலுவடைந்திருப்பது ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கும் நன்மையளிப்பதாக தமிழ் முரசு ஊடகம் கூறியுள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments