Ticker

6/recent/ticker-posts

Ad Code



சவுதி, குவைத், கத்தார் எல்லாம் இல்ல..! கோடீஸ்வரர்கள் அதிகம் குடிபெயரும் அரபு நாடு இதுதான்..!


2025ஆம் ஆண்டில் சுமார் 1,42,000 கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1,65,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் உள்ள செல்வந்தர்கள் எந்த நாடுகளுக்கு குடிபெயர்கிறார்கள் என்று 'ஹென்லி தனியார் செல்வ அறிக்கை 2025' விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 9,800 கோடீஸ்வரர்கள் குடிபெயர்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடவும் சுமார் 5.8% அதிகம்.

மேலும் அமெரிக்காவில் 7,500 கோடீஸ்வரர்களும், இத்தாலியில் 2,200 கோடீஸ்வரர்களும், சுவிட்சர்லாந்தில் 1500 கோடீஸ்வரர்களும், சவுதி அரேபியாவில் 2400 கோடீஸ்வரர்களும் குடிபெயர்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் அதிக அளவில் கோடீஸ்வரர்கள் குடிபெயர்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு மட்டும் சுமார் 3,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக வரிகள் மற்றும் கட்டமைப்புகள் சரியில்லை என்பதால் கோடீஸ்வரர்கள் பலரும் வெளியேறுகிறார்கள் என கூறப்படுகிறது.

மேலும் வரி இல்லாதது, வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கோடீஸ்வரர்கள் குடிபெயர்வது அதிகமாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments