Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்காவின் மிக மோசமான இயற்கைப் பேரிடர்; டெக்ஸாஸ் பெருவெள்ளம்!


2025 ஜூலை 4 முதல் 7 வரை டெக்ஸாஸ் மாகாணத்தில், குறிப்பாக டெக்ஸாஸ் ஹில் கன்ட்ரி கெர் கவுன்டியில்  காற்றுடன் திடீரென கனமழை கொட்டி, குவாடலூப் ஆற்றைச் சுற்றி ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதனால், குவாடலூப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீற்றர் மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாகக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது அமெரிக்காவின் மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

ஜூலை 9, 2025 வரை, வெள்ளத்தால் குறைந்தபட்சம்  121 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கெர்ர் கவுண்டியில்  97 பேர் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. இதில் 36 குழந்தைகள் மற்றும் 59 பெரியவர்கள் அடங்குவர்.

கெர்ர் கவுண்டியில் உள்ள 'கேம்ப் மிஸ்டிக்' என்ற கிறிஸ்தவ மகளிர் கோடைகால முகாமில் 27 குழந்தைகள் மற்றும் ஆலோசகர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் மற்றும் ஒரு ஆலோசகரைக் காணவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 750 மகளிர் இருந்துள்ளனர். இதில் முகாமின் உரிமையாளர் டிக் ஈஸ்ட்லேண்ட் குழந்தைகளை காப்பாற்ற முயலும்போது உயிரிழந்துள்ளார். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இது தவிர, டிராவிஸ் கவுண்டியில் 7, கெண்டால் கவுண்டியில் 6, பர்னெட் கவுண்டியில் 4, வில்லியம்சன் கவுண்டியில் 2, மற்றும் டாம் க்ரீன் கவுண்டியில் ஒருவருமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மொத்தமாகக் காணாமற்போயுள்ள 180 பேரில், கெர்ர் கவுண்டியில் மட்டும் 161 பேர் காணாமற் போயுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் பலர் விடுமுறையில் இருந்துள்ளதால், தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம் என்று ஆளுநர் கிரெக் அபாட் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பொருளாதார இழப்புக்கள் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகள், வணிகங்கள், வாகனங்கள், மற்றும் உட்கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்துள்ளன. கெர்ர் கவுண்டியில் மட்டும் 38 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மெக்ஸிகோ மாநில, உள்ளூர், மற்றும் சர்வதேச மீட்புக் குழுக்கள் 1750க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 975 வாகனங்கள், 17 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2025 ஜூலை 11 நிலவரப்படி, வெள்ளத்தின் தீவிரம் குறைந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், தொடர்ந்து மழை எச்சரிக்கைகள் மற்றும் சிறிய அளவிலான வெள்ள அபாயங்கள் இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கெர்ர் கவுண்டியில் வெள்ள எச்சரிக்கை அமைப்பு இல்லாதது மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைகளைத் தாமதமாக வழங்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எச்சரிக்கை அமைப்பு அமைப்பதற்கான மானியக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆளுநர் கிரெக் அபாட் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இப்பகுதியை, பேரிடர் பகுதியாக அறிவித்துள்ளதுடன், மாநில மற்றும் கூட்டாட்சி மறுசீரமைப்புக்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

இந்நிலையில். ஜூலை 8 முதல், மழையின் அளவு குறைந்து, வானிலை மேம்பட்டு வருவதாகவும், வெள்ள அபாயம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க, மேம்பட்ட எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. இன்று டொனல்ட் ட்ரம்ப்  பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments