Ticker

6/recent/ticker-posts

அழகான தோற்றத்துக்கு மட்டுமல்ல Sunglasses...


சுற்றுலாப் பயணத்துக்குச் சென்றால் பலர் மறக்காமல் கொண்டு செல்வது, Sunglasses.

படமெடுத்துக் கொள்ளும்போது சிறப்பாகத் தோற்றமளிக்க அத்தகைய மூக்குக்கண்ணாடிகள் உதவுகின்றன.

ஆனால் அவை வெறும் அணிகலன் தானா? இல்லை அவை கண்களைப் பாதுகாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

UV பாதுகாப்பு

கண்களும் கண்களைச் சுற்றியுள்ள சருமமும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.

சூரியனின் புற ஊதாக் கதிர்களால் (ultraviolet (UV)) பாதிக்கப்படும்போது சருமப் புற்றுநோய், கண்புரை ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக Mayoclinic எனும் அமெரிக்க மருந்து நிலையம் சொல்கிறது.

மூக்குக்கண்ணாடிகள் குறிப்பாக வெயில் காலத்தில் UV கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன.

"எவ்வளவு பெரிய மூக்குக்கண்ணாடி அணிகிறோமோ, அந்த அளவிற்குப் பாதுகாப்பு கிடைக்கும்," என்று Mayoclinic நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் டோன் டேவிஸ் (Dawn Davis) கூறுகிறார்.

மூக்குக்கண்ணாடிகளில் குறிப்பாக 'UV400' அல்லது '100% UV பாதுகாப்பு' என்று சொல்லப்பட்டிருக்கும் மூக்குக்கண்ணாடிகள் அதிக பாதுகாப்பை அளிப்பதுண்டு என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் கூறுகிறது.

பொருள்கள் மேலும் தெளிவாகத் தென்படுவதற்கு உதவலாம்

சுற்றுச்சூழல் மிகவும் வெளிச்சமாக இருக்கும்போது சில சமயங்களில் பார்வை தெளிவாக இருக்காது.

'polarised' வகை மூக்குக்கண்ணாடிகள் கண்களுக்குள் வரும் ஒளி அலைகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதிக வெளிச்சமான சூழலில் பார்வை பாதிக்கப்படாமல் இருக்க அவை உதவலாம்.

மூக்குக்கண்ணாடியின் நிறத்தையும் பொறுத்து பார்வை மேம்படலாம்.

உதாரணத்துக்கு வெளிச்சமான சூழலில் பழுப்பு நிற மூக்குக்கண்ணாடிகளை அணியும்போது கண் முன் இருக்கும் பொருள்கள் மேலும் தெளிவாகத் தெரியலாம்.

இனி Sunglasses கண்ணாடிகளை காரணம் தெரிந்து அணிவீர்கள் அல்லவா?

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments