Ticker

6/recent/ticker-posts

வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி


தேவையான பொருட்கள்  
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்) - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்,
சோயா மாவு - கால் கப்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.

செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

இதை சிறிய அளவு உருண்டையாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி ரெடி.

Post a Comment

0 Comments