Ticker

6/recent/ticker-posts

Ad Code



காய்ச்சல் மருந்து - 10 மாதக் குழந்தைக்குக் கல்லீரல் பாதிப்பு


சீனாவில் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைக்குக்கு மிதமிஞ்சிய அளவு மருந்து கொடுத்ததால் அதன் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் ஷென்ஸன் (Shenzhen) மாநிலத்தில் நடந்தது.

குழந்தையின் பெற்றோர் அதன் எடைக்கு ஏற்ற அளவைவிடக் கூடுதலாக மருந்து தந்தனர்.

அதனால் உடல் நலம் மோசமடைந்து குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

மருத்துவர் வினவியபோதுதான் பெற்றோர் ஒரே நாளில் 4 முறை மிதமிஞ்சிய அளவில் குழந்தைக்கு மருந்து கொடுத்தனர் என்பது தெரியவந்தது.

குழந்தை பருகியிருக்கவேண்டிய அளவைவிட 5 மடங்கு அதிகமான அளவு மருந்தைப் பெற்றோர் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments