Ticker

6/recent/ticker-posts

Ad Code



1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தவில்லை: ஐ.நா.


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2023ம் ஆண்டும் இதே எண்ணிக்கை இருந்ததாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது தொடர்பான ஆய்வு அறிக்கையை உலக சுகாதார அமைப்பும், யூனிசெப்ஃப் அமைப்பும் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு 89 சதவீத ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் முதல் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டது. 85 சதவீதத்தினர் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றனர்.
இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 லட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52 சதவீதத்தினர் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோபியா, இந்தோனேசியா, யேமன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய 9 நாடுகளில் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதால் இந்தநிலை மேலும் மோசமாகும் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments