Ticker

6/recent/ticker-posts

Ad Code



பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்


அக்டோபர் மாதம் தொடங்கி  திங்கள் முதல் வியாழன் வாரத்திற்கு 4 நாள்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தனது வர்த்தகப் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவ்வாறு வேலை செய்ய மறுக்கும் பணியாளர்கள்  இழப்பீட்டை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு செல்லலாம் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறியது. 

தற்போது வரை வாரத்திற்கு 3 நாள்கள் அலுவலகத்திற்கு வர வேண்டியது கட்டாயமாக இருந்துள்ளது. 

இருப்பினும், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பிரையன் நிக்கோல் முன்மொழிந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

‘மனிதர்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும்’ கலாச்சாரத்தை மீட்டெடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.

அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்வது, நிறுவனத்தின் தலைமைத்துவமும் வேலைச் சூழலும் வலுவடைவதற்கு முக்கியக் காரணமாகும் என நிக்கோல் தெரிவித்தார்.

இதற்கு முன் 1,100 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்துள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய் தொற்றுக்குப் பிறகு அலுவலகத்திற்கு திரும்பியிருப்பது மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 விழுக்காட்டுத் தொழிலாளர்கள் வீட்டிலிருந்தும், 45 விழுக்காட்டினர் சில சமயம் அலுவலகத்திலிருந்தும் சில சமயம் வீட்டிலிருந்தும் வேலை செய்கின்றனர். 

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments