
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஆனாலும் பீல்டிங்கின் போது இந்திய அணியின் வீரர்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலே இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஏனெனில் இந்திய அணி சார்பாக முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டன.
அதேபோன்று பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பீல்டிங்கின் போது நிறைய எளிதான கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்லிப் பகுதியில் நான்கு கேட்ச்களை தவறவிட்டார். அதனை பயன்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது கைக்கு வந்த நான்கு எளிய கேட்ச்களை தவற விட்டார். இதன் காரணமாக முதல் போட்டி முடிந்த கையோடு இரண்டாவது போட்டிக்கு முன்னதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியின் நிர்வாகம் தண்டனை கொடுக்கும் வகையில் அவருக்கு பிரத்தேக பீல்டிங் பயிற்சிகளை வழங்கியது.
குறிப்பாக ஸ்லிப் பகுதியில் இருந்து நீக்கப்பட்ட அவர் இனி அந்த இடத்தில் பீல்டிங் செய்ய நிற்க வைக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது. அதன்படி நடைபெற்ற ஸ்லிப் பீல்டிங் பயிற்சியில் கருண் நாயர், கே.எல் ராகுல் ஆகியோர் முதல் இரண்டு ஸ்லிப்களில் நின்று பயிற்சி செய்தனர். மூன்றாவது ஸ்லிப்பில் கேப்டன் சுப்மன் கில்லும், நான்காவது இடத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கும் பீல்டிங் பயிற்சி வழங்கப்பட்டது.
அதேபோன்று கல்லி ஏரியாவில் நிதீஷ்குமார் ரெட்டிக்கு கேட்ச்சிங் பயிற்சி வழங்கப்பட்டது. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிரத்யேகமாக பவுண்டரி லைனில் நிற்க வைத்து பீல்டிங் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் நிற்க மாட்டார் என்றும் பவுண்டரி லைனில் தான் பீல்டிங் நிற்கப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஸ்லிப் பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களே இனிவரும் போட்டிகளிலும் அந்த இடத்தில் பீல்டிங் செய்ய நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments