Ticker

6/recent/ticker-posts

Ad Code



16 பாம்புகளை மும்பைக்குள் கடத்த முயன்ற பயணி கைது


தாய்லந்திலிருந்து மும்பைக்குச் சென்ற பயணியிடமிருந்து 16 உயிருள்ள பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் நேற்று நடந்ததாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் AFP செய்தியிடம் தெரிவித்தனர்.

பயணி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

கைப்பற்றப்பட்ட பாம்புகள் விஷமற்றவை அல்லது மனிதர்களைத் தாக்கமுடியாத அளவுக்குப் பலவீனமான பாம்புகள் என்று கூறப்படுகிறது.

"garter snakes", "rhino rat snake", "Kenyan sand boa" அவற்றில் சில.

இது இம்மாதத்தில் நடந்த 3ஆவது சம்பவம் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் தாய்லந்திலிருந்து வந்த பயணி கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து விஷமுள்ள விரியன் பாம்புகள் கைப்பற்றப்பட்டன.

சில நாள்கள் கழித்துப் பல்லி உள்ளிட்ட 100 வகையான உயிரினங்களைக் கடத்த முயன்ற மற்றொரு பயணி கைதானார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாய்லந்து-இந்தியா வழி மேற்கொள்ளப்படட விமானப் பயணங்களின்போது 7,000க்கும் அதிகமான உயிரினங்கள் உயிருடன் அல்லது மடிந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments