Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாம்பை கழுத்தில் சுற்றிய பாட்டி.. துணிச்சலால் இணையத்தை மிரள விட்ட தருணம்


பாம்பை கழுத்தில் சுற்றியபடி பாட்டியொருவர் செய்த விடயம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

புனேவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணொருவர் வீட்டில் மறைந்திருக்கும் பாம்பை கையால் பிடிக்கிறார்.

அதன் பின்னர் பாம்பை கேமராவுக்கு காட்டி விட்டு, அதனை எடுத்து அவருடைய கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்.

துளியளவும் பயம் இல்லாமல் பெண் செய்த விடயம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

காணொளியை வைரலாகியதும் சபுனேவின் முல்ஷி தாலுகாவில் உள்ள அம்போலி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சகுந்தலா சுதர் என்ற மூதாட்டியே இப்படி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பாம்பு சரியாகக் கையாளப்படுவதை உறுதிசெய்த பிறகு, திருமதி சுதர் அதை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டு பாம்புகரள எவ்வாளறு கையாள்வது என விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், "பாம்பைக் கண்டால் பீதி அடையத் தேவையில்லை. எல்லா பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை அல்ல. எலிப் பாம்பு மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

உண்மையில், அது எலிகள் மற்றும் பூச்சிகளை உண்பதால் பண்ணைகளுக்கு உதவியாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் பயம் மற்றும் மூடநம்பிக்கை காரணமாக பாம்புகளைக் கொல்கிறார்கள், இது தவறான விடயம்..” என பேசியிருக்கிறார். 

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments