Ticker

6/recent/ticker-posts

Ad Code



கோவையில் திருக்குறள் முற்றோதல் பயிற்சிக்கான தொடக்க விழா


கோயம்புத்தூரில்  உள்ள குனியமுத்தூர் பகுதியில்,நூர் சேட் பதின்ம மேல்நிலைப்பள்ளி யில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, திருக்குறள் திருப்பணிகள் நுண்பயிற்சி முற்றோதல் பயிற்சிக்கான வகுப்பு தொடக்கவிழா 21.07.2025 திங்கள்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில்  இனிதே நடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றது. 
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் திரு.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.

பள்ளியின் முதல்வர் திருமதி ஆஷா மேரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவின் முக்கியமான நிகழ்வான நோக்கவுரையை கோவை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர்  முனைவர் இரா.அன்பரசி அவர்கள் அழகாக மாணவர்கள் மனங்கொள்ளும் வகையில் வழங்கினார்கள்.

குறள் யோகி தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்கள் தமிழக அரசின் இதுபோன்ற இலவச திருக்குறள் பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் மற்றும் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தம் வாழ்த்துரையில் நயம்பட எடுத்துரைத்தார்.

கணபதி தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் திரு.நித்யானந்த பாரதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து பள்ளித் தாளாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் நூலகத்திற்கு நூல்கள் பரிசளிக்கப் பெற்றன.
 இவ்விழாவில்  மாணவர்களும் தமிழ்த்துறை ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

விழாவை பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

விழாவின்  நிறைவில் நூர் சேட் பள்ளியின் துணை முதல்வர் திருமதி. மல்லிகா அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

விழா இனிதே நிறைவுற்றது.


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

1 Comments

  1. மிக்க நன்றி 🙏🙏🙏

    ReplyDelete