Ticker

6/recent/ticker-posts

Ad Code



அதை மறந்து குல்தீப்புக்காக இந்தியா.. சுந்தரை கழற்றி விட்டா பேலன்ஸ் பழாகிடும்.. ஹார்மிசன் எச்சரிக்கை


இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து சொந்த மண்ணில் முன்னிலையில் இருக்கிறது. எனவே 4வது போட்டியில் வென்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 5 பவுலர்களுடன் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக சைனாமேன் பவுலிங் ஆக்சனை வைத்துள்ள குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் அணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடி வருவதால் குல்தீப்பை அணிக்குள் கொண்டு வருவது பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா கடந்த 4 இன்னிங்சில் அரை சதத்தை அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் கடந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை எடுத்தார்.

இந்நிலையில் 4வது போட்டியில் குல்தீப் விளையாட வேண்டும் என்பதற்காக இந்தியா சுந்தரை கழற்றி விடக்கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் தெரிவித்துள்ளார். ஏனெனில் முதல் 3 போட்டிகளிலும் கடைசி நாள் வரை சென்று போராடும் அளவுக்கு இந்திய அணி சிறந்த சமநிலையுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே மாற்றத்தை செய்வது இந்திய அணியின் சமநிலையை பாதிக்கும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நீங்கள் ஜடேஜா, சுந்தரை நீக்க முடியாது. அதற்காக நீங்கள் 3 ஸ்பின்னர்களை விளையாட வைப்பீர்களா? என்பது பெரிய கேள்வி. என்னைப் பொறுத்த வரை குல்தீப் விளையாடுவது சரியாக இருக்கும். ஆனால் அவரை எப்படி அணிக்குள் கொண்டு வருவீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. முதல் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை (சுதர்சன்) நீக்கியது போன்ற முடிவை எடுக்கலாம். ஒருவேளை வாஷிங்டன் சுந்தரை கழற்றி விடுவது மிகப்பெரிய முடிவாக இருக்கும்”

“அந்த முடிவை நான் எடுக்க விரும்ப மாட்டேன். ஏனெனில் மான்செஸ்டர் மைதானத்தில் குல்தீப்புக்கு பவுன்ஸ் இருக்காது. ஆனால் போட்டி நடைபெற நடைபெற பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளும் கடைசி நாள் வரை சென்றது. அதை இந்தியா மிகவும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்சமயத்தில் அவர்களுடைய அணி சமநிலையுடன் இருக்கிறது” என்று கூறினார்.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments