
ஒரு நாடு. அமைதியும் நலனும் நிறைந்தது. மக்கள் நேர்மையாக வேலை செய்து, நாட்டு வளர்ச்சியில் பங்களித்து வந்தார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த அரசு செய்து கொடுத்தது.
பின் தங்கியிருந்த அந்த நாடு உலகம் போற்றும் ஒரு நாடாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு நாள், அந்த நாட்டின் அரசியலுக்கு ஒரு புதிய முகம் வந்தான் — திரை உலகின் பிரபல நடிகர், வீரமணி.
படங்களில் நாட்டை காப்பான், ஏழைகளை உயர்த்துவான், ஊழலை ஒழிப்பான் என்று கதாநாயகனாக நடித்தவன். மக்கள் அந்த கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கையிலும் நம்பிவிட்டார்கள். தேர்தல் வந்ததும், இவருக்கு வாக்குகள் மழைபோல விழுந்தன. “அவர் தான் நம்ம நாளைய நேதாஜி!” என்று மக்கள் பெருமையாக பேசினார்கள்.
அந்த நாட்டில் சூதாட்டங்களும்,லாட்டரி டிக்கட் விற்பனையும் சர்வ சாதாரமாகிவிட்டது.பாடசாலைகள் சினிமாக் கொட்டகைகளாக மாறிக் கொண்டிருந்தன.
ஆனால் வெற்றி பெற்ற பிறகு, மாயம் ஆரம்பமானது. அவர் பேசியது போல அல்ல, நடந்தது போல அல்ல .நாடாளுமன்றத்தை சினிமா ஸ்டூடியோவாக மாற்றினார். உண்மை தீர்வுகளுக்குப் பதிலாக டயலாக் பேசி மக்கள் கவனத்தை திருப்பினார். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றாமல் வசனங்கள் பேசியே நாட்களை கடத்தினான்.
மக்கள், உணராமல், சினிமா பைத்தியமாக மாறி விட்டார்கள். யாரும் கேள்வி கேட்கவில்லை. நாடு சீரழிவுக்கு போனது, ஆனால் பலர் இன்னும் அந்த நடிகரின் ஸ்டைல், சிரிப்பு, “mass scene”களை பார்த்து உற்சாகப்பட்டனர்.அதுதான் நிஜம் என்று நம்பினார்கள்.
ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் நாளும்பொழுதும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததை நாட்டு மக்கள் அறியாமல் அவனுடைய மாஸ் டயலாக்கை நம்பியிருந்தார்கள்.
ஒரு நாள், உண்மையை உணர்ந்த சிலர் விழித்தனர். “இவன் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் !” என்று சொன்னார்கள்.
ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது.
மக்கள் மிகப்பெரும் சுமைகளை தாங்க வேண்டிய நிலை உருவாகியது.பசியும்,பட்டினியும் தலைவிரித்தாடியது.
மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்தார்கள்.அத்யாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டன.
நாட்டை ஆளும் அந்த நடிகன் மட்டும் விலை உயர்ந்த வீட்டில், காவலாளிகள் சூழ வாழ்ந்தான். கதாபாத்திரம் போல் இல்லை, ஒரு வில்லனாக.
மக்களைப்பற்றிய கவலையில்லாமல் அவனது படங்களில் நடித்த கதாநாயகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தான்.
கடைசியாக நாட்டில் யாரும் சினிமா நடிகனின் வார்த்தைகளை நம்பவில்லை. அவனுடைய மாயாஜால வசனங்களை இப்போது பலர் உணர்ந்துள்ளனர். ஆனால், அது எளிதில் திரும்பி வரவில்லாமல் போனது. நாடு விரிவாக மாறிவிட்டது. நவீன நகரங்களிலும், கிராமங்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டன.
அந்த நடிகன் மாபெரும் விழாக்களில் மீண்டும் மீண்டும் தனது சினிமா டயலாக்குகளை பேசியே மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான்., மக்கள் அவன் மூலம் வெளியேற முடியாமல், அவன் மாயாஜாலத்தில் சிக்கிக்கொண்டனர்.
சினிமா மோகத்தில் சிக்கிக்கொண்ட சின்னஞ் சிறுசுகள் அந்த நடிகனை ஒரு கடவுளுக்கு சமமாக நினைத்தார்கள்.
படிதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நிழலைவிட்டு ஒதுங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்பாவி மக்கள் அவனுடைய மாஸ் டயலாக்குகளிலிருந்து மீள முடியாமல் இருந்தனர்., சிலருக்கு அது உண்மையாகக் காட்சி கொடுத்தது.
அந்த நாடு அதலபாதாளத்திற்கு சென்றது.
கல்வியிலும்,தொழில்நுட்பத்திலும் முன்னனில் இருந்த அந்த நாடு மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றது.
மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.முன்னைய அரசாங்கத்தின் சாதனைகளை நினைத்துப் பார்த்தார்கள்.
"தவறு செய்துவிட்டோம் .போலியை நம்பி ஏமாந்துவிட்டோம் "என்று மக்கள் குமுறினார்கள்.
மீண்டும் ஒரு புதிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் போராடினார்கள்.
"கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்"
"மாயத்தை விட உண்மை முக்கியம். ஒரு கதாநாயகனை நம்பி வாக்கு கொடுப்பதைவிட, ஒரு நேர்மையான மனிதனை தேர்ந்தெடுப்பதே நாட்டுக்கு நலன்."
மாஸ்டர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments