
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா நிலவரத்தை அடுத்த ஒரு வாரத்தில் சரிசெய்ய நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதேபோன்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டிருந்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டைநிறுத்தப் பேச்சில் முன்னேற்றம் இல்லை.
உடன்பாடு ஏற்படுவதைத் தடுப்பதாக இருதரப்பும் ஒன்று மற்றதன்மீது குற்றஞ்சாட்டின.
60 நாள் சண்டைநிறுத்தத்துக்கு வாஷிங்டன் ஆதரவு தெரிவித்தது.
பிணையாளிகளைக் கட்டங்கட்டமாக விடுவிப்பது, காஸாவின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவது ஆகியவை அதில் அடங்கும்.
இதற்கிடையே காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன வட்டாரச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய காஸாவில் தண்ணீர் விநியோக மையத்துக்கு அருகே நடந்த ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டு பிள்ளைகள் அவர்களில் அடங்குவர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments