
சனத்தொகையின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் திகழ்வதாக பியூ ஆய்வு மையம் கருத்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும், பக்கச்சார்பற்ற உலக அளவிலான தரவு ஆராய்ச்சிகளைச் செய்துவரும் நிறுவனம் இதுவாகும். இந்த ஆய்வுமையத்தின் ஆய்வின் முடிவுகள் உலகின் தீர்மானமெடுப்பவர்களால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுகின்றன.
அண்மையில் வெளியிடப்பட்ட இதன் உலகளாவிய மதப்பரம்பல் பற்றிய ஆய்வில், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இயற்கையான சனத்தொகை வளர்ச்சியே காரணமென்று கூறியுள்ளது.
2010ம் ஆண்டுக்குப் பின்னரான தசாப்தகால இடைவெளியில் உலகளாவிய மதக் கட்டமைப்பு எவ்வாறு மாறியது என்பதை ஆய்வு செய்தபோது, 2.3 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மதமாக கிறிஸ்தவம் இருந்தபோதிலும், இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதாக அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.
பியூவின் ஆய்வின்படி, 2010 முதல் உலகின் கிறிஸ்தவ மக்கள் தொகை சுமார் 1.8 சதவீதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றது. உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான், பெனின் மற்றும் லெபனானிலுள்ள பிற மதங்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் ஓமான் மற்றும் தான்சானியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் பியூ சுட்டிக்காட்டியுள்ளது.
மத நம்பிக்கை இல்லாதவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் சீனா, செக் குடியரசு, எஸ்தோனியா, ஜப்பான், வடகொரியா மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும். எந்த மதத்துடனும் இணைக்கப்படாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு சீனாவாகும். சீனாவில் 1.3 பில்லியன் மக்கள் எந்த மதத்துடனும் இணையாதவர்களாக வாழ்கின்றனர். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடான சீனாவில் பெரும்பாலானோர் தங்களை எந்த மதத்துடனும் இணைத்துக் கொண்டவர்களாக இல்லை என்று விகிபீடியாவின் ஆய்வுகள் காட்டுகின்றன.
அமெரிக்காவில் எந்த மதத்திலும் இணைக்கப்படாத மக்களின் சதவீதம் 2010 ஐ விட 97 சதவீதம் அதிகரித்து செங்குத்தான வளர்ச்சி கண்டுள்ளது.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments