Ticker

6/recent/ticker-posts

Ad Code



சுப்மன் கில்லிடம் நியாயத்தை காட்டுங்க.. ஒருத்தரை நம்பியிருக்கும் இந்தியாவுக்கு அவர் வந்தாகனும்.. அசாருதீன் கவலை


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்கள் அடித்த இந்தியா அரிதான சாதனை படைத்த போதிலும் சிறப்பாக ஃபினிஷிங் செய்ய தவறியது.

அதே போல 7 கேட்ச்களை தவற விட்டதும் பும்ராராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக விளையாடியதும் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. இதற்கிடையே சுப்மன் கில் அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்தத் தவறியதும் தோல்வியைக் கொடுத்ததாக நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் முதல் போட்டியிலேயே சுப்மன் கில்லை விமர்சிப்பது நியாயமல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் லோயர் ஆர்டர் பேட்டிங் சீட்டுக்கட்டாக சரிந்ததே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பவுலிங் துறையில் வெற்றி பெறுவதற்கு ஜஸ்ப்ரித் பும்ராவை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பதாகவும் அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அசாருதீன் பேசியது பின்வருமாறு.

“சுப்மன் கில்லுக்கு கேப்டனாக இதுவே முதல் போட்டி. எனவே நீங்கள் கேப்டன்ஷிப் பற்றி எதையும் பேச முடியாது. அவரைப் பற்றி ஆரம்பத்திலேயே எதையும் பேசக்கூடாது. புதிதாக தலைமைப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு நாம் நியாயமான வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவருக்கு நிறைய ஆதரவையும் நேரத்தையும் வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போதே புகார் செய்து விமர்சனம் செய்யக்கூடாது”

“முதல் போட்டியில் நமது பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவாலேயே தோல்வியை சந்தித்தோம். எப்படி இருந்தாலும் தற்போது நாம் நல்ல வீரர்களை தேர்வு செய்துள்ளோம். எனவே வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பவுலிங் செய்வது அவசியம். நாம் பும்ரா மீது அதிகமாக சார்ந்திருக்கிறோம். அதனால் வெற்றி பெறுவது எளிது கிடையாது. நமக்கு இன்னும் நிறைய அனுபவமிக்க பவுலர்கள் தேவை”

“அடுத்தப் போட்டியில் இந்தியா குல்தீப் யாதவை விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் வரும் ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் சர்துள் தாக்கூர் நீக்கப்பட்டு இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments