Ticker

6/recent/ticker-posts

Ad Code



புதிய காதி நீதிபதியாக மௌலவி அப்துல் ஹஸன் முஹாஜிரீன் அன்சார் ( நுழாரி) நியமனம்


கிண்ணியா பிரதேசத்திற்கான காதி நீதியாக கிண்ணியா குட்டிக்கராச்சியை வசிப்பிடமாகக் கொண்ட மௌலவி அப்துல் ஹஸன் முஹாஜ்ரீன் அன்சார்  (நுழாரி) அவர்கள்  நீதிச் சேவை ஆணைக் குழுவினால் தேர்ந்தேடுக்கப்படட்டுள்ளார். 

2025.06.16ந் திகதியன்று நீதிச் சேவை ஆணைக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நியமனக் கடிதத்தின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் காதி அவர்கள் கருத்து தெரிவித்த போது"அல்ஹம்து லில்லாஹ்.ஒரு அமானிதமாக எனக்கு வழங்கப்பட்ட இந்த சமூகப் பொறுப்பினை சமூக நிறுவனங்களான கிண்ணியா உலமா சபை, கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,பள்ளி நிருவாகிகள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், வழிகாட்டுதல்களோடும் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்".

எனவே நீங்கள் அனைவரும் எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து அவர் தனது கருத்தை தெரிவிக்கையில்

*காதி நீதிமன்ற சேவைகளை நாடி வரும் மக்கள் தங்களின் செயற்பாடுகளை காதி நீதிமன்ற காரியாலயத்துடன் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

*காதி நீதிமன்ற விடயமாக காதி நீதிபதியை அவரது வீட்டில் சந்திப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

*புதிய வழக்குகள் தாக்கல் செய்ய வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் பிரகாரம் காதி நீதிமன்ற காரியாலயத்தில் மேற்கொள்ள வேண்டும்.

*காதி நீதிமன்ற செயற்பாடுகளுக்காக காழி நீதிமன்ற காரியாலயத்திற்கு வெளியே நான் எவரையும் நியமிக்க வில்லை என்பதை கவனத்திற் கொள்ளவும்.

*காதி நீதிமன்ற செயற்பாடுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கோடு எவருக்கும் அன்பளிப்புக்களை(பணமாகவோ. பொருளாகவோ) வழங்குவதை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் கிழமை நாட்களில்
  • திங்கள்: புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும்.
  • செவ்வாய்: தலாக் வழக்குகள் தொடர்பான விடயங்கள் மேற் கொள்ளப்படும்.
  • புதன்: பஸ்கு வழக்குகள் சம்பந்தமான விடயங்கள் மேற்கொள்ளப்படும்.
  • வியாழன்: தாபரிப்பு வழக்குகள் மற்றும் வலி அனுமதிப் பத்திரம் சம்பந்தமான விடயங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சனி: வழக்கு விசாரணைகள் இடம் பெறும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்களை கவனத்திலெடுத்து செயற்படுத்துவதன் மூலம் எமது காதி நீதிமன்ற செயற்பாடுகளை சிறப்பாக மேற் கொள்ள எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு இச்சந்தர்ப்பத்தில் பொது மக்களை வினையமாக கேட்டுக் கொண்டார்.

இதுவரையில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் இருக்கும்  பல நூறு கோவைகளையும் முறையாக விசாரித்து உரிய நபர்களுக்கான தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று நாமும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். இவர் ஒரு முன்மாதிரியான காதி நீதிபதியாக  திகழ்வார் என்றும், இவரது சேவைகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்.

திருகோணமலை நிஸா 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments