
டிக்டாக் செயலியை வாங்குவதற்கு ஒரு பணக்கார நிறுவன பிரதிநிதிகளைத் தாம் சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர்கள் அந்த செயலியை வாங்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
டிக்டாக் வாங்கவிருக்கும் தரப்பு யார் என்பதை இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று டிரம்ப் FOX NEWS தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.
டிக்டாக் செயலியை வாங்கும் அல்லது விற்கும் உடன்படிக்கைக்கு சீனாவின் அதிபர் XI JINPING இணக்கமும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.
டிக்டாக் செயலியை சீனா நாட்டைச் சேர்ந்த BYTEDANCE நிறுவனம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சீனாவின இணக்கம் இங்கு அவசியமாகிறது என்று டிரம்ப் தெளிவுப்படுத்தினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு டிக்டாக் அச்சுறுத்தலாக இருப்பதால் டிக்டாக் செயலி இதன் செயல்திறனை அமெரிக்காவில் நிறுத்த வேண்டும் அல்லது வேறொரு தரப்பினருக்கு விற்க வேண்டு என்று 2024 அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.
இருப்பினும், டிக்டாக் விவகாரத்தில் டிரம்ப் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டார்.
அமெரிக்கர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் போது அவர்களின் தரவுகள் முறையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
சீனா- அமெரிக்கா வர்த்தக மோதல் காரணமாக டிக்டாக் செயலி தொடர்பான விவகாரத்தில் சீனா இணக்கம் தெரிவிக்காது என்றும் ஒரு கருத்து உலா வருகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments