Ticker

6/recent/ticker-posts

Ad Code



செம்மணியில் தொடரும் அவலம் : புதிய இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு


செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோடொன்று அவதானிக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று(05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாளான இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வுப்பணி நடைபெற்றது.

இதுவரை மொத்தமாக 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது - என்றார்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments