
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று 5-ஆவது நாளாக பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இந்தியா 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது.
இதனை அடைய முடியாமல் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறியது. அந்த அணியின் ஜாக் கிராவ்லி ரன் ஏதும் எடுக்காமலும் பென் டக்கட் 25 ரன்களிலும், ஆலி போப் 24 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 6 ரன்களும், ஹேரி புரூக் 23 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் 56 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் பவுலர் ஜோஷ் டாங்க் 2 ரன்களில் வெளியேறினார்.
68.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 271 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 338 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த கேப்டன் சுப்மன் கில்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments