Ticker

6/recent/ticker-posts

Ad Code



SL VS BD:இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது வங்கதேசம்


ஞாயிற்றுக்கிழமை தம்புல்லாவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது .

லிட்டன் தாஸின் அதிரடி ஆட்டமும், அற்புதமான பந்துவீச்சும்,இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாயிருந்தது.  .

முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த வங்கதேசம்,   20 ஓவர்களில் 177/7 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 50 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து, ஐந்து சிக்ஸர்களுடன் இன்னிங்ஸை நங்கூரமிட்டார். ஷமிம் ஹொசைன் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வங்கதேசம் 170 ரன்களைக் கடக்க உதவியாய் இருந்தார்.

இலங்கையின் பந்துவீச்சில் பினுரா பெர்னாண்டோ  31/3 விக்கட்டுகளை பெற்றார்.

பதிலுக்கு, இலங்கை அணி 15.2 ஓவர்களில் 94 ரன்களுக்கு சுருண்டது. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள்அப்பறமாக பந்து வீசியதால், பாதும் நிஸ்ஸங்கா (32) மற்றும் தாசுன் ஷனகா (20) ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

 லெக்-ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன் பந்தில் சிறப்பாக செயல்பட்டார், 3/18 விக்கட்டுகளை வீழ்த்தினார், ஷோய்ஃபுல் இஸ்லாம் மற்றும் முகமது சைஃபுதீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கையின் டாப் மற்றும் மிடில் ஆர்டர்  சிறப்பாக செயல்படத் தவறிவிட்டன, ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். லிட்டன் தாஸின் இரண்டு ஸ்டம்புகள் உட்பட பங்களாதேஷின் அபாரமான  பீல்டிங், உள்ளூர் அணிக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்தது.

புதன்கிழமை (16) நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.

ஓட்ட விபரங்கள்;

வங்கதேசம் 20 ஓவரில் 177/7 (லிட்டன் தாஸ் 76, ஷமிம் ஹொசைன் 48; பினுரா பெர்னாண்டோ 3/31)
இலங்கை 15.2 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட் (நிஸ்ஸங்க 32; ரிஷாத் ஹொசைன் 3/18, ஷோரிபுல் இஸ்லாம் 2/12)

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments