Ticker

6/recent/ticker-posts

ரூ.100 கோடி மதிப்பில் நீதா அம்பானியின் சொகுசு கார்: உலகில் மொத்தம் 11 தான் இருக்காம்


ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு ஆடம்பர பொருட்களின் மீது தீரா காதல், இதற்கு விலையுயர்ந்த ஆட்டோமொபைல் பொருட்கள் மீதான அவரின் ஆர்வமே சாட்சி.

விலையுயர்ந்த புடவைகள், ஆபரணங்கள், கடிகாரங்கள் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவரிடம் பல சொகுசுகார்கள் இருந்தாலும் 100 கோடி ரூபாய் மதிப்புடைய Audi A9 Chameleon காரை சொந்தமாக்கியுள்ளார்.

தனித்துவமான சிறப்பான அம்சங்களுடன் கூடிய இந்த கார் உலகளவில் 11 மட்டுமே உள்ளது. வண்ணங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டதால் A9 Chameleon என அழைக்கப்படுகிறது, ஒரு பொத்தானை அழுத்தினால் வண்ணங்களை மாற்றிவிடும்.

ஐந்து மீற்றர் நீளம் கொண்ட இந்த காரில் பயணிப்பது விண்கலத்தில் செல்வதை போன்றதொரு மாயையை கொடுக்கும். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவாறு 4.0-litre V8 engine பொருத்தப்பட்டுள்ளது.

சொகுசு கார்களின் பட்டியல்

இதுமட்டுமல்லாது

Rolls-Royce Phantom VIII EWB,
Mercedes-Maybach S600 Guard,
Ferrari 812 Superfast,
Bentley Continental Flying Spur,
Rolls-Royce Cullinan, மற்றும்
BMW 7 Series 760Li Security போன்ற சொகுசு கார்களும் நீதா அம்பானியிடம் உள்ளன. 

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments