Ticker

6/recent/ticker-posts

மக்கள் விரும்பும் வேட்டை-ஆர்.எஸ்.கலா (27/8/25)


வாழ்த்தொன்று 
உரைக்க வந்தேன்
வார்த்தை கிடைக்கவில்லை
வேட்டையின் புகழ் ஓங்க 
மெட்டுட்டுப் பாடிடவே.
கூடாரம் இல்லாக் குருவி 
சேதாரம் கொடுக்கா அருவி 
உலகாளும் கருவி 
உண்மையை உரக்கக் கூறும்  குழவி.

இலக்கியத்தில் கருவாகி
இலக்கை நோக்கி உருவாகி 
ஏ.ஐ வரை ஊடுருவி 
வெற்றி நடை போடு  மகாகவி.

சொல்லிலே சாட்டை 
சேகரிப்பிலே சேட்டை
அதுதான் மக்கள் விரும்பும் வேட்டை
ஆண்டு தோறும் புதுப்புது
அவதாரம் எடுத்துக் கொண்டே
வளர்ந்து வரும் கோட்டை.

நானும் அதனுள் அடங்கும் சட்டை
நாளும் பொழுதும் செதுக்கிடும் பட்டை 
வாழ்க பல ஆண்டு நற்பொழிவோடு 
வளர்க மென்னேலும் சிறப்போடு.

கலப்படம் இல்லாத் தமிழோடு
களைப்பு இல்லாச் சேவையோடு 
கடந்து வா பல யுகங்கள் 
கனிந்த கனியாய்  விரும்பிட உன்னை 
கணினியின் வழியே வாரஇதழே.

ஆர்.எஸ்.கலா
Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments