Ticker

6/recent/ticker-posts

Ad Code



யாழில் தேரர் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்தில் உள்ள  ஆலயங்களை பார்ப்பதற்காக வருகை தந்த தேரர் ஒருவர் யாழில் உள்ள விகாரையில் உயிரிழந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதுளை வீதி, பசறையைச் சேர்ந்த வனபதுளே சரணதர தேரர் (வயது 72) என்பவராவார்.

மேற்படி தேரர் யாழில் உள்ள ஆலயங்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு விகாரையில் தங்கி இருந்த நிலையில், நேற்று காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.

tamilmirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments