
சீனாவின் யூனான் (Yunnan) மாநிலத்தில் 3 வயதுச் சிறுமி தலையில் பழக்கத்தியுடன் நிதானமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அந்தச் சிறுமியின் தாயார் அவருடன் இருந்தார்.
சிறுமி அழவில்லை....ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யவில்லை.
அவர் உடனடியாக அவசரச் சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து சிறுமி சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.
சம்பவத்தைக் காட்டும் காணொளியைக் கண்ட இணையவாசிகள் சிலர் சிறுமியின் நிதானத்தைக் கண்டு வியந்தனர்.
சிறுமி பெரியவர்களை விடத் தைரியமானவர் என்று இணையவாசிகள் தெரிவித்தனர்.
தலையணைக்கு அடியில் பழக்கத்தியை வைத்திருந்ததாகவும் சிறுமியைப் பயமுறுத்தப் பழக்கத்தியை எடுத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்தார். அது எப்படிச் சிறுமியின் தலைக்குள் புகுந்தது என்பது தமக்குப் புரியவில்லை என்றார் அவர். அதனால் பிள்ளையை அழைத்துக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததாகத் தாயார் சொன்னார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments