Ticker

6/recent/ticker-posts

உலகத்துக்கு தேவை.. இந்திய அணிக்கு அழைப்பு.. துவண்டு கிடக்கும் வெ.இ அணிக்கு கம்பீர் உத்வேக ஸ்பீச்


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதையும் சேர்த்து 2002க்குப்பின் தொடர்ந்து 23வது வருடமாக 10வது டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இந்தியா அசத்தியுள்ளது. அதன் வாயிலாக ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் இந்திய மண்ணில் ஏமாற்றத் தோல்வியை சந்தித்தது. 

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கி வந்த வெஸ்ட் இண்டீஸ் தற்சமயத்தில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அத்தொடரின் முடிவில் தங்களுடைய அணிக்கு ஊக்கமளிக்குமாறு வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி இந்திய அணியை கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்றனர். அங்கே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களுடைய ஆலோசனைகளையும் அன்பையும் வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து தங்களுடைய அணிக்கு ஆலோசனை வழங்குமாறு கெளதம் கம்பீரிடம் சமி கேட்டுக் கொண்டது பின்வருமாறு. 

“ஒரு உயரடுக்கு அணியின் பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் இங்கே இருக்கிறார். வெற்றிகரமான அவர் தம்முடைய சில ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களின் ஆலோசனையும் கேட்க வேண்டும்” என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் பேசியது பின்வருமாறு.

“எங்கே விளையாடினாலும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடுவது எப்போதுமே கௌரவமானது. நீங்கள் எப்போதுமே உங்களை களத்திலும் களத்திற்கு வெளியேயும் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை சமியிடமும் சொன்னேன். களத்திற்கு வெளியே உங்களை நீங்கள் எடுத்துச் செல்வதைப் பார்த்து கற்றுக்கொள்வது நல்ல அனுபவம். உங்களுடைய பணிவு இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அணிகள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று”. 

“உங்களைப் பார்க்கும் போது அடுத்த தலைமுறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஊக்கமளிப்பீர்கள் என்று கருதுகிறேன். டெல்லியில் 2வது இன்னிங்ஸில் விளையாடியதை வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய புதிய டெம்ப்ளேட்டாக எடுத்துச் செல்ல வேண்டும். சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் பற்றி பேசுவது எளிது. ஆனால் சிறுசிறு பங்களிப்பு தான் அணியை உருவாக்கும். எனவே அதைப்பற்றி பேசுவது முக்கியம்”

“கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் பேச்சுக்காக இப்படி சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது என்னுடைய இதயத்திலிருந்து வருகிறது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலக கிரிக்கெட்டுக்கு தேவையில்லை. உலக கிரிக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் தேவை” என்று கூறினார்.

crictamil

 


Post a Comment

0 Comments