
கனிவான அணுகுமுறை மற்றும் மனிதாபிமான புரிதல் மூலமாக உலகெங்குமுள்ள மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி ஒருவர் கடந்த 2025 ஆகஸ்ட் 20ம் திகதி காலமானார்.
அவர்தான், அமெரிக்க நீதிபதியும், அரசியல்வாதியுமான ஃபிராங்க் காப்ரியோ (Francesco Caprio).
1936ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதியன்று ரோடு தீவிலுள்ள பிராவிடன்ஸில் இத்தாலிய-அமெரிக்க குடும்பத்தில் பிறந்துள்ள இவர், அமெரிக்காவின் ரோடு தீவு மாநிலத்தின் பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1985 முதல் பணியாற்றியவராவார்.
ரோடு தீவு உயர் கல்வி ஆளுநர் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர், ரோடு தீவில் உள்ள ஒரு கடலோர உணவகம் ஒன்றின் பங்குதாரராகவும் இருந்துள்ளார்.
இவரது நீதித்துறைப் பணி, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள், "Caught in Providence" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு, உலகளவில் புகழ் பெற்றன.
இந்நிகழ்ச்சி 2017ல் சமூக ஊடகங்களில் வைரலானபோது, 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.
அத்துடன் "Parking Wars" என்ற மற்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார்.
தனது மனிதாபிமானமிக்க மற்றும் கனிவான தீர்ப்புகளால் "உலகின் மிகவும் கனிவான நீதிபதி" என்று சமூக ஊடகங்களில் அறியப்பட்டவரான இவர் பாசுடனில் உள்ள சப்போல்க் சட்டப் பல்கலைக்கழகத்தில் (Suffolk Law School) இரவுப் பள்ளியில் சட்டக் கல்வி பயின்றுள்ளார்.
ஃபிராங்க் காப்ரியோ அவர்கள், ஜோய்ஸ் இ. காப்ரியோ என்பவரை மணந்து, அவருடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்; இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

2023 டிசம்பரில்,இவரது 87வது பிறந்தநாளுக்குப் பிறகு, இவருக்குக் கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதை இவர் முகநூல் மற்றும் யூடியூப் காணொளி மூலம் அறிவித்து, தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ஃபிராங்க் காப்ரியோ 2025 ஆகஸ்ட் 20 அன்று, தனது 88வது வயதில், பிறகு காலமானார். இவரது மறைவு குறித்து பல சமூக ஊடக இடுகைகள் மற்றும் செய்திகள் அவரது மனிதாபிமான அணுகுமுறையைப் பாராட்டி வெளியிடப்பட்டன.
இவரது நீதிமன்ற காணொளிகள் மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, நீதித்துறையில் இரக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments