Ticker

6/recent/ticker-posts

Ad Code



தசாப்தம் ஒன்றைத் தொட்ட "வேட்டை"க்கு வாழ்த்துகள்!


தமிழை வளர்த்திடும் மண்ணில்
தசாப்தம் ஒன்றினில் "வேட்டை"

தரமான செய்திகள் ஆக்கங்கள்
தவறாமல் தந்திடும் "வேட்டை"

மின்னலாய் வந்து மறைந்திடும்
மின்னிதழ் போலன்று "வேட்டை"

தன்னிலை மாற்றிடாது என்றும்
தரணியில் நிலைத்திடும் "வேட்டை"

வாசகர் பாராட்டி மகிழ்ந்திடும்
வாழ்த்தில் நனையட்டும் "வேட்டை"

தமிழ்க்காற்று வீசுகின்ற உலகில்
தனித்துவம் பேணட்டும் "வேட்டை"

மின்னி ஒளிவீசிடும் விண்ணில்
மின்னட்டும் தினமும் "வேட்டை"

இன்னும் தசாப்தங்கள் கடந்தும்
இனிதாய்த் தொடரட்டும் "வேட்டை"

கல்ஹின்னை
ஃபஹ்மி ஹலீம்தீன்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments