Ticker

6/recent/ticker-posts

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நட்பு - அமெரிக்கா வருத்தம்


இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்கா சொல்கிறது.

வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ (Peter Navarro) அப்படிச் சொல்கிறார்.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவை வலுப்படுத்த இந்தியா முயல்வதாக அவர் கூறினார்.

Financial Times இதழில் அவர் கட்டுரை தீட்டினார்.

இந்தியா அமெரிக்காவின் உத்திபூர்வப் பங்காளியாக விரும்பினால் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்றார் நவாரோ.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிடமிருந்து பொருள்கள் வாங்கும்போது இந்தியா மட்டும் ஏன் வாங்கக் கூடாது என்று இந்தியா கேட்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்து என்ன செய்வார் என்று சொல்ல முடியாத நிலையில் இந்தியாவும் சீனாவும் மெல்ல உறவை வலுப்படுத்தி வருகின்றன.

தற்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) இந்தியாவில் இருக்கிறார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக சில அமெரிக்க பிரதிநிதிகள் இந்தியா செல்லவிருந்தனர். ஆனால் அந்தப் பயணம் ரத்தானது.

அதிபர் டிரம்ப்பின் செய்கை காரணமாக இந்தியா மெல்ல சீனாவின் பக்கம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் பிரபல வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments