Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவுக்கு ஆதரவாக கட்டுரை: அமெரிக்காவின் அகம்பாவத்தை புட்டுபுட்டு வைக்கும் சீன பத்திரிக்கை


US Tariff Latest News: தனது கட்டுப்பாடுகளுக்கு செவி கொடுக்காமல் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை தொடரும் இந்தியா மீது அமெரிக்கா தொடர்ந்து இறுக்கத்தை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொடால்ட் டிரம்ப், நேற்று அதை 50% ஆக அதிகரித்தார்.

அமெரிக்கா-இந்தியா வரிப்போர்: உற்றுநோக்கும் உலக நாடுகள் 

இப்படிப்பட நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என அமேரிக்கா சூசகமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்து வரும் வரிப் போரை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரியை 50% ஆக உயர்த்திய பிறகு, சீனாவின் தினசரி பத்திரிகையான குளோபல் டைம்ஸ் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காண முடிகின்றது.

ரஷ்யா அல்ல, காரணமே வேறு: புட்டுபுட்டு வைக்கும் சீன பத்திரிக்கை

- ‘இந்தியாவின் மூலோபாய சமநிலை அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச மேலாதிக்கத்தின் சுவரைத் தாக்குகிறது’ என்ற தலைப்பிலான கட்டுரையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியாவை பழிவாங்கவில்லை என்றும், அமெரிக்கா விரும்புவதை இந்தியா செய்யாததற்காகவே இந்தியா தண்டிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

- 'அமெரிக்கா கூறுவதை பின்பற்றும் வரை மட்டுமே இந்தியாவை நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா கருதும். இந்தியா ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் தருணத்தில், அதன் மதிப்பு அமெரிக்காவின் பார்வையில் குறைந்துவிடும். அமெரிக்காவின் பார்வையில், இந்தியா ஒருபோதும் சமமான கூட்டாளியாக இருக்காது. இந்தியாவை தனக்கு தேவைப்படும் வேளைகளில் மட்டும் பயன்படுத்தும் நோக்கத்தில்தான் அமெரிக்கா இருக்கும்" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- சீனாவின் ஊடக அறிக்கையில் ஒரு அழகான உருவகமும் காட்டப்பட்டுள்ளது. 'அமெரிக்கா, இந்தியாவை ஒருபோதும் உணவு மேஜையில் ஒரு விருந்தினராக கருதாது, மெனுவில் உள்ள ஒரு உணவு வகையாக மட்டுமே பார்க்கும்' என்றும் அந்தக் கட்டுரை அமெரிக்காவின் சுயநலம் சார்ந்த நோக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

புவிசார் அரசியலில் சமநிலையை தேடும் இந்தியா

'சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா புவிசார் அரசியலில் சமநிலையை பராமரிக்க முயற்சித்து வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த நாடுகளைக் கொண்ட உலகத்தை ஆதரிக்கும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற குழுக்களில் இந்தியா இணைந்தது. அதே நேரத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா வலுவான பாதுகாப்பு உறவுகளை உருவாக்கியது. இந்த அணுகுமுறை இந்தியா ராஜ்ஜீய ரீதியாக நகரவும் வெவ்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்றவும் இடமளித்தது.' என்று அறிக்கை இந்தியாவின் புவிசார் அரசியல் சமநிலைக்கான தேடலை விளக்கியுள்ளது. 

இருப்பினும், உலகின் உயர்மட்ட சக்தியாக இருப்பதில் அமெரிக்காவின் உறுதியான நம்பிக்கையின் காரணமாக இந்த உத்தி இப்போது ஒரு கடினமான யதார்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

அமெரிக்காவின் நடவடிக்கை ஒரு கவலைக்குரிய போக்கை எதிரொலிப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது: 

அமெரிக்கா பனிப்போர் பாணி குழு போட்டிகளை மீண்டும் கொண்டுவருவதால், 

- "ஒரு பக்கத்தை ஆதரிக்காமல் இருப்பது" "தவறான பக்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு" சமமாக கருதப்படுகிறது.

- மேலும் "நடுநிலைமை" "விசுவாசமின்மை" -யாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா vs இந்தியா: அடுத்து என்ன?

உலகப் பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டிற்கும் இந்தியா தனது சொந்த முடிவுகளை எடுக்க விரும்புவதற்கும் இடையிலான வெளிப்படையான மோதல் உலக நாடுகளின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இந்தியா அமேரிக்கா இடையிலான உறவுகளை அமெரிக்காவுடனான வலுவான கூட்டாண்மை என்று இந்தியா நினைத்து வந்தது. ஆனால், அது ஒருதலைப்பட்சமானது மட்டுமே என்பதை இப்போது உணர முடிகிறது. வெளிப்படையான விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பதிலாக அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நாட்டை நம்புவது உண்மையான பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்பதை இந்தியா புரிந்துகொள்ளும் தொடக்கப்பிள்ளியாக சமீபத்திய சில நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. 

அமெரிக்கா 50% வரி விதித்து இறுக்கத்தை அதிகரித்த பின்னரும் இந்தியா தனது நிலைப்பாட்டில் திடமாகத்தான் உள்ளது. இந்தியா தனது சொந்தப் பாதையில் உறுதியாக இருந்து, பரஸ்பர மரியாதை, நியாயமான நன்மைகள் மற்றும் அனைவருக்கும் உதவும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என நம்பப்படுகின்றது. சமமான அதிகாரம் பகிரப்படும் ஒரு உலகத்தை ஆதரிப்பதில்தான் உண்மையான வாய்ப்பு உள்ளது என்பதை தொடர்ந்து மறுக்க முடியாது என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்.

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments