Ticker

6/recent/ticker-posts

ரணில் விக்கிரமசிங்கவின் கைது :மேலதிக சட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்!


அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேலை முன்னாள் ஜனாதிபதியின் கைதானது இலங்கை அரசியலில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.   

பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின்  தீர்ப்பை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்த வழக்கு தீவிர விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது, இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி தற்போது நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை காரணமாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் கைது சில விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அநேகமான இலங்கை மக்கள் இதை ஆதரிக்கின்றனர்.


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments