
மியன்மாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் பாலம் தகர்க்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவ அரசாங்கம் கூறியுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான ஆயுதமேந்திய குழு கண்ணிவெடிகளைக் கொண்டு அதனைத் தகர்த்ததாக ராணுவ அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
ஆயுதமேந்திய குழு இராணுவம் பொய் சொல்கிறது என்று கூறி மறுப்புத் தெரிவித்தது, ராணுவ அரசாங்கத்தைச் சாடியது.
கோக்டீக் வயாடக்ட் (Gokteik Viaduct) என்ற ரயில் பாலம் 1901இல் காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்டது.
102 மீட்டர் உயரம் உள்ள கோக்டீக் வயாடக்ட் அந்தக் காலத்தில் உலகின் ஆக உயரமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருந்தது.
அது இடிந்துகிடப்பதைக் காட்சிப்படுத்தும் காணொலிகளும் நிழற்படங்களும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments