
"ரணில் விக்கரமசிங்கவின் கைதானது ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும்." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரணிலின் கைதுக்குப் பின் அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கிளம்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
ஏனெனில் கடந்த தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தற்போதைய எதிர்க் கட்சிகள் ஒருவரை ஒருவர் திருடர்கள் என்று திட்டித் தீர்த்ததை நாம் அறிந்தததுதான்.
அதில் முக்கியமாக 'வெற்றி பெற்றால் திருடர்களை ஒழிப்பேன் ' என்று வாய் கூசாமல் பேசி மக்களை ஏமாற்றியவர்தான் சஜித்.
ஆனால் இன்றைய அரசாங்கம் திருடர்களின் மீது கை வைத்ததும் சஜித்துக்கு ரோஷம் வந்துவிட்டதாம்.அதனால் திருடர்களுடன் கூட்டுச் சேர முடிவெடுத்துள்ளாராம்.
"இந்தக் கைது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்" என்றும் சஜித் தெரிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது.
இதே ரணில் எத்தனை முறை ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டிருப்பார் என்பதை சஜித் ஏன் நினைத்துப்பார்க்கவில்லை?.
"அரகல"சம்பவங்களை மக்கள் மறக்கவில்லை.
கூட்டுச் சேரும் எதிர்க் கட்சிகளில் அநேகமானவர்கள் குற்றப் பின்னனியுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
ரணில் நாட்டுக்கு செய்த துரோகங்கள் ஏராளம். ,கொள்ளையர்களுக்கு,சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது ,"VAT"திரடர்களை காப்பாற்றியது போன்ற நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரும் துரோகங்களை பட்டியலிடலாம்.
இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் மறக்கவில்லை.ஆனால் அரசியல்வாதிகள் மறந்துவிட்டார்கள்.
திருடர்களுடன் கூட்டுச் சேரும் சஜித்தின் அரசியல் வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாகக் கூட இது மாறலாம்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments