
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments