
கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் பெருமளவு கைத்துப்பாக்கிகள் பொதுமக்கள் சிலர் வசம் கிட்டியமை தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளது.
விடுதலைப்புலிகளது முகாம்கள் அமைந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியிலேயே பெருமளவு கைத்துப்பாக்கிகள் புதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டவிரோத கும்பல்கள் வசம் அவை அகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட கைது வேட்டையில் 30வரையான இளைஞர்கள் கைதாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே தென்னிலங்கையில் கடுவெல பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது மூன்று ரி -56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் ரி-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
jvpnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments